கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஜெர்மனி திட்டம்

கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஜெர்மனி திட்டம்

2 mins read
1b996e83-cb06-4957-a503-718d8395f739
-

பெர்­லின்: ஜெர்­ம­னி­யில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் விகி­தம் ஆக அதி­க­மாக உயர்ந்து வரு­கிறது.

எனவே கடு­மை­யான கட்­டுப் ­பா­டு­க­ளைக் கொண்டுவர அந்­நாட்டு அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

கடைசி ஏழு நாளில் ஒவ்­வொரு 100,000 பேரில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை 303ஆக உள்­ளது. முந்­திய நாள் இது 289ஆக இருந்­தது.

கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தி­ல் இ­ருந்து பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும் இது.

திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி, மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டு­வோர் விகி­தம் 100,000 பேருக்கு 4.65ஆக உள்­ளது. ஒரு சில பகுதி­களில் நோயா­ளி­க­ளைக் கையாள முடி­யா­மல் தீவிர சிகிச்சைப் பிரி­வு­கள் திண­று­கின்­றன.

அதே நேரத்­தில் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கும் வகை­யில் பல மருத்­து­வ­ம­னை­கள் ஊழி­யர்­களை அப்­பி­ரி­வு­க­ளுக்­கு அனுமதிக்கின்றன.

சில மருத்­து­வ­ம­னை­களில் அவ­ச­ர­மற்ற அறு­வை ­சி­கிச்­சை­கள் தள்­ளி­வைக்­கப்­ப­டு­கின்­றன.

ஜெர்­மன் மருத்­துவ சங்­கத்­தின் தலை­வர் ஃபிராங்க் உல்­ரிச் மாண்ட்­கோ­மெரி மோச­ம­டைந்து வரும் இச்­சூழ்­நி­லை­யில், நவம்­பர் 25ஆம் தேதி­யோடு முடி­வ­டை­வுள்ள கொவிட்-19 அவ­ச­ர­நி­லையை நீட்டிக்க அழைப்பு விடுத்­துள்­ளார்.

அத்­து­டன் தடுப்­பூசி போடா­த­வர்­கள், அதைப் போட்­டுக்­கொள்­வதற்­கான அழுத்­தத்தை அதி­க­ரிக்க வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, கூட்­டணி ஆட்சி அமைக்­க­வுள்ள மூன்று கட்­சி­களும் முன்­மொ­ழி­யப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை மேலும் கடு­மை­யாக்கத் திட்­ட­மிட்டு வரு­வ­தாக கிரின்­ கட்சியின் இணைத் தலை­வர் ராபர்ட் ஹேபேக் சொன்­னார்.

ஜெர்­மன் பிரதமர் மெர்­க­லும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் குறித்துப் பரி­சீ­லித்து வரு­வ­தாக சொன்­னார்.

இவை வரும் வியா­ழக்­கி­ழமை அன்று நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்பிக்­கப்­படும்.

சமூகத் தொடர்­பு­களில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­படும் என்று கூறப்­ப­டு­கிறது.

மூன்று மாநி­லங்­க­ளின் சுகா­தார அமைச்­சர்­கள் முடக்­க­நிலை, பள்ளி­ களை மூடு­வது போன்ற கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைக் கொண்டு மாநில அர­சாங்­கத்­திற்கு அதி­கா­ரம் அளிக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர்.

இத­னி­டையே, மருத்­துவ நிபுணர்­க­ளின் எச்­ச­ரிக்­கையை அடுத்து, இல­வச கொவிட்-19 பரி­சோ­தனைத் திட்­டம் மீண்­டும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.