மணிலா: பிலிப்பீன்சில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் சென்றனர்.
இரண்டு மாத காலத் தொடக்க திட்டமாக கிருமித் தொற்று அபாயம் குறைவாக உள்ள பகுதிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதத்தை அடிப்படையாக கொண்டு மற்ற இடங்களிலும் படிப்படியாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு, பிளாஸ்டிக் தடுப்பு களுக்கு மத்தியில் வகுப்பறை யில் அமர்ந்திருக்கும் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன.