செனட்டர் பதவிக்கு போட்டியிடுகிறார் டுட்டர்டே

செனட்டர் பதவிக்கு போட்டியிடுகிறார் டுட்டர்டே

1 mins read
92958949-ac67-4173-9cab-be718774f3ba
-

மணிலா: மகள் சாரா டுட்­டர்டே-கார்­பி­யோ­விற்கு எதி­ராக துணை அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யி­டு­வ­தைத் தவிர்த்து செனட்­டர் பத­விக்­குப் போட்­டி­யி­டு­கி­றார் பிலிப்­பீன்ஸ் அதி­பர் டுட்­டர்டே. அவர் துணை அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யி­டு­வார் என்று அவ­ரது ஊடகச் செய­லா­ளர் கூறி­யி­ருந்­தார்.

டுட்­டர்டே மகள் சாரா, தந்­தை­யின் கட்­சி­யின்கீழ் அல்­லா­மல், முன்­னாள் அதி­பர் கிளோ­ரியோ அர்­ரோ­யோ­வின் கட்­சி­யின் கீழ், அதி­பர் வேட்பாளரான முன்­னாள் செனட்­டர் ஃபெர்டினண்ட் மார்­கோ­சு­டன் துணை அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யி­டு­கி­றார்.

இதற்­கி­டையே, மார்­கோ­சுக்கு ஆத­ரவு தெரி­விக்க மறுத்­து­விட்ட டுட்­டர்டே, மற்­றொரு அதி­பர் வேட்­பா­ள­ரும் தனது நீண்­ட­கா­ல­ உத­வி ­யா­ள­ரு­மான கோவிற்கு ஆத­ரவு அளிப்­ப­தாக சொன்­னார்.

முன்பு துணை அதிபர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த கோ, அதைத் திரும்ப பெற்றுவிட்டு அதிபர் பதவிக்கு போட்டியிட பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவு­டன் இணைந்து டுட்­டர்டே துணை அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யி­டு­வார் என்ற பேச்­சும் முன்னர் நில­வி­யது.

எனவே துணை அதி­பர் தேர்­தல், அவ­ருக்­கும் அவர் மக­ளுக்­கும் இடை­யி­லான போட்­டி­யாக இருக்­குமோ என்­றுகூட கரு­தப்­பட்­டது.

துணை அதி­பர் போட்­டி­யில் இருந்து டுட்­டர்டே வில­கி­யது குறித்து பேசிய கோ, குடும்­பத் தக­ரா­றைத் தவிர்க்க விரும்­பு­வ­தாக சொன்­னார்.