லிவர்பூல்: லிவர்பூல் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பு சம் பவத்தை பிரிட்டிஷ் போலிசார் தீவிரவாதத் தாக்குதல் என்று வகைப்படுத்தியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பின்போது மாண்டுபோனவர், டாக்சியில் லிவர்பூல் மருத்துவமனையை அடைந்ததாகவும் அப்போது காருக்குள் தன்னுடன் அவர் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததாகவும் போலிசார் கூறினர்.
இமாத் அல் சுவீல்மின் (படம்) எனும் அந்த 32 வயது ஆடவர் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் போலிசார் மேற்கொண்ட சோதனையில் அதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்தாகவும் 2017ல் அவர் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் என்றும் அவர்கள் சொன்னார்கள்.
ஈராக்கில் இருந்து குடியெர்ந்த அவருக்கு மனநல பிரச்சினைகள் இருந்ததாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து, குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த குண்டுவெடிப்பிற்கு முன்பு காரின் ஓட்டுநர் தப்பிக் குதித்து உயிர்
பிழைத்தார்.
டாக்சியில் பயணித்தவர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் காருக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பிய ஓட்டுநரின் சமயோசிதத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரிட்டனில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை 'கடுமை' நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தீவிரவாத தாக்குதலுக்கான சாத்தியம் அதிகம் உள்ளதை இந்த எச்சரிக்கை நிலை குறிப் பிடுகிறது.
ஏனெனில் ஒரே மாதத்தில் லிவர்பூலில் நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது. முன்பு நடந்த தாக்குதலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சர் டேவிட் அமெஸ் மாண்டார்.