மியன்மாருக்கு வராதீர்கள்: போட்டி அரசாங்கம்

1 mins read
6915a3ee-3925-45a6-9f9d-b2bba3daad08
-

யங்­கூன்: மியன்­மா­ரில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களும் உள்­நாட்டு பிரச்­சி­னை­களும் குறைந்­துள்­ள­தால், அனைத்­து­லக எல்­லை­யைத் திறக்­க­வுள்­ள­தாக ராணுவ ஆட்­சிக் குழு அறி­வித்­துள்­ளது.

சீனா, மற்றும் பல நாடு­க­ளின் தடுப்­பூசி நன்­கொ­டை­யால், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்கை குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்­துள்­ள­தாக மியன்­மார் கூறி­யுள்­ளது.

டிசம்­பர் மாதத்­தில் அண்­டை

­நா­டு­க­ளான சீனா, தாய்­லாந்­து­டன் நில எல்­லை­யைத் திறக்­க­வுள்­ள­தா­க­வும் அடுத்த ஆண்­டின் முதல் காலாண்­டில் அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்­கான எல்­லை­யைத் திறக்­க­வுள்­ள­தா­க­வும் ராணுவ ஆட்­சி­யின் நிர்­வாக மன்­றம் கூறி­யது.

இது நாட்­டின் பொரு­ளி­யலை மீட்­க­வும் வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்க்­க­வும் உத­வும் என்று கரு­தப்

­ப­டு­கிறது.

ஆனால், மியன்­மா­ரில் போட்டி அர­சாங்­கம் நடத்­தும் தேசிய ஒற்­றுமை அரசு 'வெளி­நாட்டுப் சுற்­று­லாப் பய­ணி­கள் யாரும் வரா­தீர்­கள்' என்று கூறி­யுள்­ளது.

'மியன்­மா­ரில் மக்­கள் கொல்­லப்­ப­டு­கி­றார்­கள், பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­யப்­ப­டு­கி­றார்­கள், மக்­க­ளின் வீடு­கள் சேதப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது வெளி­நாட்­டுப் பய­ணி­கள் சுற்­றுலா வரு­வ­தற்­கான நேரம் அல்ல," என்று போட்டி அர­சாங்­கத்­தின் அமைச்­சர் ஒரு­வர் கூறி­னார்.

இதற்­கி­டையே, தேர்­த­லில் முறை­கேடு செய்­த­தாக மியன்­மார் முன்­னாள் தலை­வர் ஆங் சான் ‌சூச்சி மீது மியன்­மார் ராணுவ ஆட்­சிக்­குழு நேற்று குற்­றம் சாட்­டி­யது. அவ­ரு­டன் முன்­னாள் அதி­பர் வின் மியண்ட் உட்­பட 15 அதி­கா­ரி­கள் மீதும் இதே குற்­றம்­சாட்­டப்­பட்டது.

தேர்­தல் முடி­வு­கள் செல்­லாது என்று கூறி சென்ற பிப்­ர­வரி மாதத்­தில் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய ராணு­வம், சூச்­சியை காவ­லில் வைத் தது.