சோல்: தென்கொரியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கூடுதல் தடுப்பூசி போடுவதற்கான இடைவெளியை ஆறு மாதத்தில் இருந்து நான்கு மாதமாக குறைக்க திட்டமிட்டு வருகிறது.
தென்கொரியாவில் சுமார்
90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் அண்மைய கிருமிப் பரவலால் மூத்தோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருமித்தொற்று காரணமாக இந்த வாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 82 விழுக்காட்டினர் மூத்தோர். ஒரு மாதத்திற்கு முன்பு இது 65 விழுக்காடாக இருந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 30 விழுக்காட்டு படுக்கைகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 விழுக்காட்டிற்கும் மேல் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் நிரம்பிவிட்டால், முடக்கநிலை கொண்டு வரப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கொரிய நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியது.
எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தாதிமை இல்லங்கள் மற்றும் தொற்று அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், ஊழியர்கள் ஆறு மாதங்களுக்குப் பதிலாக நான்கு மாதங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கொரிய நோய் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், போலிசார், தீயணைப்புத் துறையினர் போன்றோர் ஐந்து மாதங்களில் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு
உள்ளது.
நேற்று அங்கு 3,187 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அந்நாட்டில் பதிவான இரண்டாவது ஆக அதிக எண்ணிக்கையாகும் இது.