மாஸ்கோ: ஏவுகணை சோதனையின்போது தனது செயற்கைகோள் ஒன்றை அழித்ததாக ரஷ்யா ஒப்புக்கொண்டது. ஆனால் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அது ஆபத்தை விளைவிக்கும் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்தது.
ரஷ்யாவின் இச்சோதனை யால், 1,500க்கும் மேற்பட்ட சிதைவுகள் விண்வெளியில் சேர்ந்ததாக வாஷிங்டன் குற்றஞ்சாட்டியது.
விண்வெளியில் ரஷ்யா மேற்கொண்ட சோதனைக்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.