25 சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் இலவச வாய்க் கொப்புளிப்பான் விநியோகம்

25 சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் இலவச வாய்க் கொப்புளிப்பான் விநியோகம்

1 mins read
30970e45-f063-420c-b27d-0b8dbf99c003
தெமாசெக் அறநிறுவனத்தின் 'ஆயத்தமாக இருப்போம்' திட்டத்தின்கீழ் இந்த 'பிவிபி-I' வாய்க் கொப்புளிப்பான் இலவசமாக வழங்கப்படவுள்ளது. படம்: தெமாசெக் அறநிறுவனம் -

வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து, 25 சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளில் இருந்து ஒரு போத்தல் வாய் கொப்புளிக்கும் திரவத்தை சிங்கப்பூர் குடும்பங்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

தெமாசெக் அறநிறுவனத்தின் 'ஆயத்தமாக இருப்போம்' திட்டத்தின்கீழ் வாய்க் கொப்புளிப்பான் வழங்கப்படவுள்ளது.

தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும் கிருமிகளை இத்திரவம் கொன்றுவிடும் என்பதால் கொவிட்-19 தொற்று ஏற்படும் வாய்ப்பு குறையும்.

அடுத்த மாதம் 12ஆம் தேதிவரை, காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வாய்க் கொப்புளிப்பான் விநியோகம் இடம்பெறும்.

இந்த 250 மி.லி. திரவ போத்தலைப் பெற விரும்பும் குடும்பங்கள், 9099 6600 என்ற எண் வழியாக 'Hello' என்ற செய்தியை அனுப்பி, அதனைப் பெறும் நாள், நேரம், இடம் ஆகியவற்றைப் பதிவுசெய்யலாம். https://stayprepared.sg/staywell/register/ என்ற இணையப்பக்கம் வழியாகவும் பதிவுசெய்யலாம்.

தாங்கள் குறிப்பிட்ட சிங்கப்பூர் பூல்ஸ் கிளைக்குச் சென்று, 'எஸ்பி' பொதுப் பயனீட்டுக் கட்டண விலைப்பட்டி அல்லது கணக்கு எண்ணையும் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் வந்த உறுதித்தகவலையும் காட்டி, இத்திரவதைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்