ஔரங்கபாத் (மகாராஷ்டிரா): கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர், தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதற்காக வேறு இருவரை கொவிட்-19 சிகிச்சை மையத்திற்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது.
இதற்காக அவ்விருவரு போலி நோயாளிகளுக்கும் ஆளுக்கு ரூ.10,000 தருவதாக அவர்கள் தந்தனர்.
இதனையடுத்து, அந்தப் போலி நோயாளிகள் இருவரையும் உண்மையான நோயாளில் ஒருவரான கௌரவ் கத்தார் என்பவரையும் ஔரங்கபாத் நகரக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் ககன் பகாரே என்ற இன்னொரு கொரோனா நோயாளியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஔரங்கபாத் விலங்குக் காட்சியகத்திற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனையில் அவர்கள் இருவர்க்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

