மட்ரிட்: விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து பயணிகள் வெள்ளிக்கிழமை காலை (நவம்பர் 19) அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஸ்பெயினில் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொருனா எனும் நகரில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்து பயணிகள் வெயேற்றப்பட்டனர்.
விமான நிலைய கட்டடத்திலிருந்து அந்த விமானம் தள்ளி நிறுத்தப்பட்டதாகவும் அது பரிசோதிக்கப்படுவதாகவும் கொருனா விமான நிலையப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொருனா விமான நிலையம் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது.