S$665 பி. மீட்புத் திட்டம்

S$665 பி. மீட்புத் திட்டம்

2 mins read
87b50cd8-d5ea-4977-8741-91fed443d495
-

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவிப்பு

தோக்­கியோ: உல­கின் 3வது ஆகப்­பெ­ரிய பொரு­ளி­யல் நாடான ஜப்­பான், நாட்­டின் பொரு­ளி­யலை தூக்கி நிறுத்­தும் திட்­டத்தை நேற்று வெளி­யிட்­டது.

சுமார் 56 டிரில்­லி­யன் யென் (S$665 பில்லியன்) மதிப்­புள்ள ஊக்கவிப்பு திட்­டத்தை நேற்று பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா அறி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­யில் சிக்கி­யுள்ள அந்­நாடு 3வது முறை­யாக பொரு­ளி­யல் மீட்­புத் திட்­டத்தை வெளி­யிட்­டுள்­ளது.

"ஜப்­பா­னிய மக்­க­ளுக்கு பாது­காப்பு, நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த இது போது­மா­ன­தாக இருக்­கும்," என்று பிர­த­மர் கிஷிடா குறிப்­பிட்­டார்.

பொரு­ளி­யல் ஊக்­கு­விப்புத் திட்­டத்தை நாடா­ளு­மன்­றம் அங்­கீ­கரிக்க வேண்­டும்.

பதி­னெட்டு வய­துக்­குக் கீழ் உள்ள பிள்­ளை­க­ளின் பெற்­றோ­ருக்கு ரொக்­கம் மற்­றும் பற்­றுச்­சீட்­டு­கள், தாதி­யர் மற்­றும் பரா­ம­ரிப்பு துறை ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு ஆகி­ய­வற்றை ஊக்­கு­விப்­புத் திட்­டம் உள்­ள­டக்­கி­யி­ருக்­கிறது.

முன்­னாள் பிர­த­மர்­கள் சுகா­வும் ஷின்சோ அபே­யும் இதற்கு முன்பு 2020ஆம் ஆண்­டில் பொரு­ளி­யலை மேம்­ப­டுத்த முறையே 40 டிரில்­லி­யன் யென், 38 டிரில்­லி­யன் யென் நிதியை செல­விட்­டுள்­ள­னர்.

ஆனால் பொரு­ளி­யலை இது மீட்­டெ­டுக்­குமா என்று பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் சிலர் சந்­தே­கம் எழுப்பி­ இ­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில் கொள்­ளை­நோய்க்­குப் பிந்­திய சமூ­கத்­திற்கு பொரு­ளி­யலை நிர்­மா­ணிக்க முடி­யும்," என்று அமைச்­ச­ரவை மற்­றும் ஆளும் கூட்­ட­ணி­யின் கொள்கை வகுக்­கும் கூட்­டத்­தில் பிர­த­மர் தெரி­வித்­தார்.

திரு சுகா பதவி வில­கி­ய­தைத் தொடர்ந்து கட்­சித் தலை­மையை ஏற்ற திரு கிஷிடா, கடந்த மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் வெற்றி பெற்­றார். அப்­போது நாட்­டின் பொரு­ளி­ய­லைத் தூண்­டும் திட்­டங்­களை அவர் அறி­வித்­தி­ருந்­தார்.

கிரு­மிப்­ ப­ர­வல் கார­ண­மாக வர்த்­த­கங்­கள் குறிப்­பாக மது­பா­னக் கூடங்­கள், உண­வகங்­கள் மாதக்­ கணக்­கில் தொடர்ந்து செயல்­ப­டா­மல் தடு­மாறி வரு­கின்­றன. ஜப்­பா­னின் எல்­லை­யும் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு மூடப்­பட்­டுள்­ளது.

செப்­டம்­பர் மாதம் வரை­யி­லான மூன்று மாத பொரு­ளி­யல் வளர்ச்சி 0.8 விழுக்­காடு சுருங்­கி­யி­ருப்­ப­தாக அர­சாங்க புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இது, பொரு­ளி­யல் சரிவை தெளிவாகக் காட்­டு­கிறது. கிரு­மித்­தொற்று வேறு அதி­க­ரித்து உள்ளதால் செலவு, விநி­யோ­கத் தொடர் பாதிக்­கப்­பட்டு வர்த்­த­க­மும் சரிந்­துள்­ளது. ஆனால் அண்­மைய மாதங்­க­ளாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறைந்து வரு­கின்­றன. தற்­போது மூன்­றில் ஒரு பங்கு மக்­கள் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். நாடு முழு­வ­தும் கட்­டுப்­பா­டு­களும் விலக்கப்பட்­டுள்­ளன.