100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அரசாங்க பரிசை ஏற்க முன்னாள் பிரதமர் நஜிப் மறுப்பு

1 mins read
0835e67f-cdbd-4f4f-9f76-d3c9972b1d14
இம்மாதம் 18ஆம் தேதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த முன்னாள் பிரதமர் நஜிப். படம்: ராய்ட்டர்ஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­ம­ரான நஜிப், அர­சாங்­கம் தனக்கு வெகு­ம­தி­யாக வழங்­கிய நிலம், வீட்டை ஏற்­றுக்­கொள்ள மறுத்­து­விட்­டார்.

கோலா­லம்­பூ­ரில் சுமார் 100 மில்­லி­யன் (32.5 மி வெள்ளி) ரிங்­கிட் மதிப்­புள்ள நிலம், வீட்டை அவ­ருக்கு அர­சாங்­கம் பரி­சாக வழங்கு வதா­கக் கூறப்­பட்­டது.

பிர­த­ம­ராக அவர் சேவை­யாற்­றி­யதை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் அந்­தப் பரிசு வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் அர­சாங்­கத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அதிர்ச்­சி­ய­டைந்த எதிர்க்­கட்­சி­கள் அர­சாங்­கத்­தின் மீது பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருந்­தன.

கொள்­ளை­நோய் பிடி­யில் நாடு சிக்­கி­யி­ருக்­கும் வேளை­யில் அவ­ருக்­குப் பரிசு வழங்­கு­வது தேவையா என மக்­களும் எரிச்­ச­ல­டைந்­துள்­ள­னர்.

இந்த நிலை­யில் அர­சாங்­கம் அளித்­துள்ள பரிசை ஏற்­றுக் கொள்­ளப் போவ­தில்லை என்று திரு நஜிப் கூறி­யுள்­ளார்.

"முன்­னாள் பிர­த­ம­ர­மாக இருந்­த­தன் அடிப்­ப­டை­யில் வழங்­கப்­பட்­டா­லும் வெகு­ம­தியை நிரா­க­ரிக்க முடிவு செய்­துள்­ளேன்," என்­றார் அவர்.

"மக்­கள் சிர­ம­மான கால­கட்­டத்­தில் இருப்­பதை நான் அறி­வேன். இந்­நே­ரத்­தில் நாட்­டின் கவ­னம் மக்­கள் மீது இருக்க வேண்­டும். வரும் சனிக்­கி­ழமை நடைெப­றும் மலாக்கா தேர்­த­லில் இது ஒரு சர்ச்­சைக்­கு­ரிய விவா­த­மாக மாறக் கூடாது," என்று திரு நஜிப் தெரி வித்­தார்.

1எம்­டிபி நிதி ஊழல் தொடர்­பான வழக்­கில் முன்­னாள் பிர­த­மர் நஜிப்­புக்கு 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு தற்­போது அவ­ரது மேல்­மு­றை­யீடு நிலு­வை­யில் உள்­ளது.

இந்த நிலை­யில் அவ­ருக்கு அர­சாங்­கம் வெகு­மதி வழங்­கி­யி­ருப்­பது புதிய சர்ச்­சை­யைக் கிளப்­பி­யுள்­ளது.