கோலாலம்பூர்: மலேசியாவின் 1எம்டிபி நிறுவனத்தின் பல பில்லியன் டாலர் மோசடியுடன் தொடர்புடைய 16.3 மில்லியன் அமெரிக்க டாலரை (S$22 மி.) சிங்கப்பூர் அண்ைமயில் திருப்பியளித்ததாக மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
2009க்கும் 2014க்கும் இடைப் பட்ட காலத்தில் மலேசிய அரசாங்க நிதியிலிருந்து சுமார் 4.5 பில்லியன் டாலர் நிதி பல்வேறு வழியில் பல நாடுகள் வழியாக எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி யிருந்தனர். இந்த நிலையில் பில்லியன் கணக்கான நிதி இன்னமும் கணக்கில் வரவில்லை என்று மலேசிய அரசு கூறியுள்ளது. இதுவரை 20.5 பில்லியன் ரிங்கிட் (S$6.7 பில்லியன்) மதிப்புள்ள 1எம்டிபி ெசாத்துகளை மலேசியா மீட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, குவைத், மொரிஷியஸ், சைப்ரஸ், ஹாங்காங் இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

