ஜெருசலம்: பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸைத் தடை செய்துள்ளதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து காசாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பிரிட்டனின் இந்த முடிவு உள்ளதாகக் கூறப்படுகிறது.
"அதிநவீன ஆயுதங்கள், தீவிரவாத பயிற்சி வசதிகள் உட்பட ஹமாஸ் இயக்கம் குறிப்பிடத்தக்க தீவிரவாதத் திறனைக் கொண்டுள்ளது. அதனால்தான் ஹமாஸைத் தடைசெய்ய நேர்ந்தது," என்றார் பிரித்தி பட்டேல்.
பிரிட்டனின் இந்நடவடிக்கை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது என்றார் ஹமாஸ் அரசியல் பிரிவு அதிகாரி சமி அபு.
பிரிட்டனின் இந்த முடிவை வரவேற்றுள்ள இஸ்ரேலிய பிரதமர் நேஃப்தலி பென்னட், ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என்று சொன்னார்.

