ஜெனிவா: டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் பற்றி விவரங்களை சீனா வெளியிட வேண்டும் என்று அமெரிக்காவும் ஐநாவும் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பிறகு டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாயைக் காணவில்லை என்ற புகார் எழுந்ததது.
இதற்கு சீன அரசாங்கம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால் அவரின் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.
இந்நிலையில் பெங் ஷுவாய் நலமுடனும் முழு சுதந்திரத்துடனும் தன்னுடைய வீட்டில் இருப்பதாகவும் விரைவில் வெளியுலகில் காணப்படுவார் என்றும் குளோபல் டைம்ஸ் செய்தியாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய முடியவில்லை என்று கூறும் அமெரிக்காவும் ஐநாவும் வீராங்கனை பற்றிய விவரங்களை ஆதாரத்துடன் சீன அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.

