ஐரோப்பாவில் உயரும் தொற்று: உலக சுகாதார நிறுவனம் கவலை

ஐரோப்பாவில் உயரும் தொற்று: உலக சுகாதார நிறுவனம் கவலை

1 mins read
f184566b-e794-457c-b371-8eb3c635fd8a
-

லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கிருமித்தொற்றின் புதிய அலை குறித்து உலகச் சுகாதார நிறுவனம் மிகவும் கவலை தெரிவித்துள்ளது.

அவசர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மார்ச் மாதத்திற்குள் மேலும் 500,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்று அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹன்ஸ் குளுக் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் சொன்னார்.

குளிர்காலம், தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் போதுமான அளவு இல்லாதது, டெல்டா வகை கிருமி உள்ளிட்டவை கிருமிப் பரவல் மீண்டும் வேகமெடுக்க காரணம் என்றார் அவர்.

எனவே தடுப்பூசி போடுவதை அதிகரிப்பது, பொதுச் சுகாதார நடவடிக்கைகளையும் புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை நடைமுறைப் படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பாவின் ஆஸ்திரியாவில் முதல்முறையாக நேற்று முன்தினம் மீண்டும் முடக்கநிலை கொண்டு வரப்பட்டது.