வியட்னாம்: கொவிட்-19 அனைத்துலக எல்லைக் கட்டுப்பாடு
களைத் தளர்த்தியுள்ள வியட்னாம் நேற்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது.
தடுப்பூசி போட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தின் கீழ், நேற்று மட்டும் தென்கொரியாவைச் சேர்ந்த 200 பேர் வியட்னாமின் பு குவோக் பகுதிக்குச் சுற்றுலா சென்றனர்.
கிருமிப் பரவலுக்கு முன்பு கிட்டத்தட்ட அரை மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் இங்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சீனா, தென்கொரியா, ஜப்பான், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.

