இரண்டு காதுகளுக்குப் பதிலாக நான்கு காதுகளைக் கொண்டது ‘மைடஸ்’ என்ற இந்த பூனை. அரிய வகை மரபணு உருமாற்றத்தால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாத பூனையின் பெயரில் தொடங்கப்பட்ட இன்ஸ்டகிராம் பக்கத்தை 73,000 பேர் பின்தொடர்கின்றனர்.
துருக்கியின் அங்காரா நகரில் ஐந்து பூனைக்குட்டிகளுடன் பிறந்த மைடஸ், பிறகு கனிஸ் டெஸ்மெசி என்பவரால் தத்தெடுக்கப்பட்து. பூனையின் தோற்றத்தாலும் அதன் மீதுள்ள அக்கறையாலும் அதனைத் தத்தெடுத்ததாக டெஸ்மெசியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்
தொட்டது எதையும் பொன்னாக்கும் கழுதையின் காதுகளைக் கொண்டுள்ளதாக தொன்மவியல் கதைகள் கூறும் மைடஸ் என்ற மன்னரின் பெயரை பூனை கொண்டுள்ளது. மைடசின் தோற்றம் அசாதாரணமாக இருந்ததாலும் அதனால் அதன் சுகாதாரமோ செவிப்புலனோ பாதிக்கப்படவில்லை என்றும் அதனை ஆராய்ந்த விலங்கு மருத்துவர் கூறினார்.