கொவிட்-19: நெதர்லாந்தில் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

கொவிட்-19: நெதர்லாந்தில் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

1 mins read
05b627b1-5158-41e0-8612-b784ef902593
நெதர்லாந்தின் ராட்டர்டாம் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை அங்கு வன்முறை ஏற்பட்டதால் ஏற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்தபோதும் அவர்கள் நகரில் திரண்டனர். படம்: இபிஏ -

ஆம்ஸ்­டர்­டாம்: ஐரோப்­பா­வில் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் பெருகி­ய­ தால் அங்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு எதி­ராக பல நாடு­களில் ஆர்ப்பாட் டங்­கள் வலுத்­துள்­ளன.

நெதர்­லாந்­தில் நேற்று தொடர்ந்து இரண்­டா­வது நாளாக பலர் கலவரத்திலும் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­ட­னர். அதில் ஐந்து போலிஸ் அதி­கா­ரி­கள் காய­முற்­ற­னர். மூன்று மாநி­லங்­களில் குறைந்­தது 40 பேர் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

மிதி­வண்­டி­க­ளுக்­குத் தீயிட்­டும் வெடி­களை வீசி­யும் கல­வ­ரத்­தில் ஈடு­பட்ட இளை­யர்­க­ளைக் கலைக்க டச்சு போலி­சார் முயன்­ற­னர்.

கல­வரக்­கா­ரர்­களின்மீது அதி­காரி­கள் தண்­ணீர் பீய்ச்சி அடித்­த­து­டன் நாய்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னர்.

நெதர்­லாந்­தில் கடந்த சனிக் கிழமை கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ராக மீண்­டும் மூன்று வாரங்­க­ளுக்கு முடக்­க­ ந­ட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்­டன.

அதை எதிர்த்து, தி ஹேக், ராட்­டர்­டாம், அர்க், லிம்­பர்க் மாநிலத்­தின் சில நக­ரங்­கள் உட்­பட பல இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்துவரு­கின்­றன.

குறிப்­பாக, ராட்­டர்­டாம் நக­ரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு ஏற்­பட்ட மோச­மான வன்­முறையை நிறுத்த போலி­சார் துப்­பாக்கிச்சூடு நடத்­தி­னர். அதில் மூவர் காய­ம­டைந்­த­து­டன் 51 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இவ்­வே­ளை­யில் ஆஸ்­தி­ரிய தலை­ந­கர் வியன்­னா­வில் நேற்று முன்­தி­னம் பல்­லா­யி­ரம் பேர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். நாடு­ தழுவிய முடக்­கத்­தை­யும் தடுப்­பூ­சி­ கள் கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­வ­தை­யும் அர­சாங்­கம் அறி­வித்­ததே ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்­குக் கார­ணம். குரோ ­வே­ஷிய அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்குத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கியுள்ளது. இதனால் சினமடைந்த மக்கள் தலைநகர் ஸக்ரேபில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இத்தாலியிலும் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.