கொழும்பு: இலங்கை அரசாங்கம் பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு எதிரான தடையை அகற்றியுள்ளது. அதன்வழி, முழுக்க முழுக்க இயற்கை வேளாண் சார்ந்த முதல் உலக நாடாக மாறும் திட்டத்தை அது கைவிட்டுள்ளது.
ஏற்கெனவே தேயிலை உரங்களின் இறக்குமதியில் விதித் திருந்த கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் மீட்டுக்கொண்டது. தேயிலை ஏற்றுமதி, இலங்கையில் ஏற்றுமதி வருவாய் ஈட்டும் மிகப் பெரிய தொழில் துறையாகும்.
இலங்கை அண்மைய மாதங்களில் கடுமையான பொருளியல் நெருக்கடியால் தத்தளிக்கிறது. உணவுப்பொருட்கள், எண்ணெய், இதர அத்தியாவசியப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டது.
கட்டுப்பாடுகளை எதிர்த்து விவசாயிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் பூச்சிக்கொல்லி மருந்து இறக்குமதி செய்வதற்கு எதிரான தடையை அகற்றியுள்ளது.

