வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபை சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்தவரை உறுதிப்படுத்தியுள்ளது.
குரல்வழி நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் ஜானத்தன் காப்லான் (படம்) எனும் தொழில்நுட்பத் துறை தொழில்முனைவரின் நியமனம் உறுதி செய்யப்பட்டது. திரு காப்லான், பியூர் டிஜிட்டல் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
அரசாங்கப் பள்ளிகளில் அதிவேக இணையத் தொடர்பை ஏற்படுத்தித் தரும் சமூகநல அமைப்பையும் அவர் நடத்தி வருகிறார்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்கா வுக்கும் இடையிலான வர்த்தக, பாதுகாப்பு உறுவுகளை வலுப்படுத்தத் திட்டமிடுவதாக திரு காப்லான் அக்டோபர் 20ஆம் தேதி நடந்த செனட் சபை விசாரணையின்போது கூறினார்.