மெல்பர்ன் சென்ற சிங்கப்பூர் மாணவர்கள்

1 mins read
6e25533a-b347-4c6e-8617-a8cf0f421247
-

மெல்­பர்ன்: சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நேற்று அனைத்­து­லக மாண­வர்­கள் சிலர் மெல்­பர்ன் சென்­றுள்­ள­னர். கொவிட்-19 பர­வ­லால் ஆஸ்­தி­ரே­லியா கடந்­தாண்டு தொடக்­கத்­தில் அதன் எல்­லை­களை மூடி­ய­தைத் தொடர்ந்து, ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சிங்­கப்­பூர் மாண­வர்­கள் செல்­வது தடை­பட்­டுப் போனது.

ஆனால் சிங்­கப்­பூ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் இடையே விமா­னம் வழி தடுப்­பூ­சிப் பய­ணத் தடம் திட்­டம் நடப்­புக்கு வந்­த­தைத் தொடர்ந்து, மெல்­பர்­னுக்­கும் சிட்­னிக்­கும் நேற்று விமா­னப் பய­ணங்­கள் தொடங்­கின.

கடந்­தாண்டு நவம்­ப­ரில் சிறிய எண்­ணிக்­கை­யி­லான மாண­வர்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குள் அனு­ம­திக்­கப்­பட்ட பின்­னர் இப்­போ­து­தான் மாண­வர்­கள் சிலர் அங்கு சென்­ற­டைந்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. 39 ஆஸ்­தி­ரே­லி­யப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளைப் பிர­தி­நி­திக்­கும் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் கேட்­ரி­யோனா ஜாக்­சன் அதைக் கூறி­னார்.

இன்­னும் அதி­க­மான மாண­வர்­களை ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குள் அனு­ம­திக்­கும் திட்­டத்தை இது கோடி­காட்­டு­வ­தாக அவர் கூறி­னார்.