நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று

1 mins read
47635f83-9451-4c7b-a037-edc42c78d484
தற்போது சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் கமல் அனுமதிக்கப்பட்டுள்ளார். படம்: இணையம் -

அமெரிக்காவில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பிய நடிகர் கமல்ஹாசன் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அவர் தமது டுவிட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

"அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பியபின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொவிட்-19 தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்," என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சென்னை போரூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்படும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்