ஆஸ்திரேலிய எல்லை கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வரும் டிசம்­பர் மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்­து­லக எல்லை கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­ப­டு­வ­தாக அந்­நாட்டு பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக சென்ற ஆண்டு மே மாதம் தனது அனைத்­து­லக எல்லையை மூடி­யது ஆஸ்­தி­ரே­ லியா.

தற்­போது அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தால், ஆஸ்­தி­ரே­லிய குடி­யு­ரிமை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளின் வெளி­நாட்டு குடும்ப உறுப்­பி­னர்­கள் ஆஸ்­தி­ரே­லியா செல்ல சில வாரங்­க­ளுக்கு முன்பு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இதன் அடுத்­த­கட்­ட­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மாண­வர்­கள், ஊழி­யர்­கள் உட்­பட ஆஸ்­தி­ரே­லிய விசா வைத்­தி­ருப்­ப­வர்­கள் வரும் டிசம்­பர் 1ஆம் தேதி தங்­கள் நாட்­டிற்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று மோரி­சன் கூறி­யுள்­ளார்.

மேலும் அவர்­கள் பயண விலக்கு கோரி விண்­ணப்­பிக்க வேண்­டி­யது இல்லை என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தனி­மைப்­ப­டுத்­தல் விதி­க­ளுக்கு அவர்­கள் உட்­ப­டு­வார்­கள் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் வரும் டிசம்­பர் 1ஆம் தேதி முதல் ஜப்­பான், தென் ­

கொரி­யா­வைச் சேர்ந்த தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சுற்­று­லாப் பய­ணி­களை அனு­ம­திக்­க­வுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இவ்­வாண்டு இறு­திக்­குள் இந்­தப் பய­ணம் திட்­டம் மேலும் பல நாடு­க­ளுக்கு விரி­வுப்­ப­டுத்­தப்­படும் என்­றும் மோரி­சன் கூறி­னார்.

சென்ற அக்­டோ­பர் மாத இறுதி நில­வ­ரப்­படி, கிட்­டத்­தட்ட 160,000 மாண­வர்­கள் உட்­பட 235,000க்கும் அதி­க­மான வெளி­நாட்­ட­வர்­கள் ஆஸ்­தி­ரே­லிய விசா வைத்­தி­ருப்­ப­தாக அந்­நாட்டு அர­சாங்க தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

வெளி­நாட்டு மாண­வர்­கள் மீண்­டும் அனு­ம­திக்­கப்­ப­டு­வது ஆஸ்­தி­ரே­லி­யக் கல்­வித் துறைக்­கும் பொரு­ளா­தா­ரத்­திற்­கும் பெரும் ஊக்­க­மாக இருக்­கும். ஆஸ்­தி­ரே­லிய பொரு­ளா­தா­ரத்­திற்கு வெளி­நாட்டு மாண­வர்­க­ளால் ஆண்­டுக்கு சுமார் 35 பில்­லி­யன் வரு­வாய் கிடைக்­கிறது.

அத்­து­டன் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வருகை அங்­குள்ள ஊழி­யர் பற்­றாக்­கு­றையை பெரி­தும் தீர்க்­கும் என்று எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரி­யா­வில் 1,029 பேருக்­கும் நியூ­ச­வுத் வேல்­ஸில் 180 பேருக்­கும் நேற்று கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மற்ற மாநி­லங்­களில் பெரும்­பா­லும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­க­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!