நிரந்தர நோயாக கையாள தயாராகும் நியூசிலாந்து

நிரந்தர நோயாக கையாள தயாராகும் நியூசிலாந்து

1 mins read
de015acb-e989-40d2-bbe9-dfb23aa4a1b4
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் வரும் 3ஆம் தேதி­யோடு முடி­வுக்கு வர­வுள்­ள­தைத் தொடர்ந்து கிரு­மித்­தொற்­றுக்கு மத்­தி­யில் வாழ்­வ­தற்­கான புதிய அணு­கு­மு­றை­யைக் கடை­பி­டிக்க உள்­ள­தாக சொன்­னார் அதன் பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டென்.

பெரும்­பா­லும் கிரு­மிப் பர­வல் இல்­லாத நாடாக விளங்­கிய நியூ­சி­லாந்­தில் டெல்டா வகை கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கடந்த சில மாதங்­க­ளாக கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தன.

எனவே கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்­கும் உத்­தியை கைவிட்­டு­விட்டு, அதை நிரந்­த­ர­நோ­யாக கையாள முடி­வெ­டுத்­துள்­ளார் ஜெசிந்தா.

எனவே புதிய அணு­கு­மு­றை­யின்­படி, கிரு­மிப் பர­வல் நில­வ­ரங்­க­ளின்­படி மாநி­லங்­கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய நிறங்­க­ளின் கீழ் வகைப்­ப­டுத்­தப்­படும்.

அண்­மைய கிரு­மிப் பர­வ­லால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட ஆக்­லாந்து நக­ரம், சிவப்பு நிற­மாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆக்­லாந்­தில் கட்­டுப்­பா­டு­கள் சில தளர்த்­தப்­பட்­டா­லும், 90 நாட்­க­ளுக்­கும் மேலாக முடக்­க­நி­லை­யில் உள்­ளது.

"டெல்டா வகை கிரு­மித்­தொற்றை துடைத்­தொ­ழிக்க முடி­ய­வில்லை என்­பது கடி­ன­மான உண்மை. ஆனால் அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி, தடுப்­பூசி அட்டை திட்­டம் போன்ற பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மூலம் நாம் அதை சமா­ளிக்­கத் தயா­ராக உள்­ளோம்," என்­றார் ஜெசிந்தா.

நியூ­சி­லாந்­தில் கிட்­டத்­தட்ட

83 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். 88 விழுக்­காட்­டி­னர் முதல்­முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

நியூசிலாந்தின் அனைத்­து­லக எல்லை எப்­போது திறக்­கப்­படும் என்­பது தெளி­வாக தெரி­ய­வில்லை.

அண்­டை­நா­டான ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் சென்ற ஆகஸ்ட் மாதம் தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லாத பய­ணத்­தைத் தொடங்­கிய நியூ­சி­லாந்து, கிரு­மிப் பர­வல் கார­ண­மாக மீண்­டும் அதை நிறுத்­தி­விட்­டது.