பெய்ஜிங்: சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய், அனைத்துலக ஒலிம்பிக் குழுத் தலைவருடன் காணொளியில் பேசியதாக ஒலிம்பிக் குழு கூறியது.
ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாக்குடன் கிட்டத்தட்ட 30 நிமிடம் காணொளி அழைப்பு மூலம் பேசினார் வீராங்கனை பெங்.
பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டில் பத்திரமாகவும் நலமாகவும் உள்ளதாக பெங் அப்போது கூறியதாக ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெங்கின் காணொளி உரை
யாடல் குறித்து பேசிய உலக டென்னிஸ் அமைப்பு, "எங்களுக்கு இது போதாது. பெங்கின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான, வெளிப்படையான விசாரணை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை," என்றது.
நேற்று முன்தினம் குழந்தை
களுக்கான டென்னிஸ் போட்டி ஒன்றில் பெங் கலந்துகொண்ட புகைப்படங்கள், காணொளிகள் வெளியானபோதும் இந்த விவகாரம் குறித்த பதற்றம் தணியவில்லை.
சீனாவின் முன்னாள் துணை பிரதமர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய, பிறகு சென்ற வாரம் பெங் ஷுவாய் காணாமற்போனதாக உலக அரங்கில் கவலை எழுந்தது.