ஆஸ்திரியா: தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிடில் $5,500 அபராதம்

வியன்னா: ஐரோப்­பிய நாடான ஆஸ்­தி­ரி­யா­வில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது அடுத்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் இருந்து கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதன்­பின்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் 3,600 யூரோ (S$5,500) வரை அப­ரா­தம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும்.

ஆஸ்­தி­ரி­யா­வில் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறு­மு­க­மாக இருப்­பதை அடுத்து, அங்கு இன்று திங்­கட்­கி­ழமை முதல் மீண்­டும் முடக்­க­நிலை நடப்­பிற்கு வந்­துள்­ளது.

எனவே நாட்­டில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் நோக்­கில் அங்கு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது.

இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர்க்கு, தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஒரு வாய்ப்பு வழங்­கப்­படும். அவ்­வாய்ப்பை ஏற்க மறுப்­போர்க்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

அத்­து­டன், கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மறுப்­போர்க்­கும் 1,500 யூரோ (S$2,300) வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தைக் கட்­டா­ய­மாக்­க­வி­ருக்­கும் முதல் மேற்கு ஐரோப்­பிய நாடு ஆஸ்­தி­ரியா.

அங்கு தகு­தி­யுள்­ளோ­ரில் இது­வரை கிட்­டத்­தட்ட 66 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு உள்­ள­னர்.

இதற்­கி­டையே, தேசிய அள­வி­லான முடக்­க­நிலை உட்­பட அர­சாங்­கத்­தின் புதிய நட­வ­டிக்­கை­களை எதிர்த்து அந்­நாட்­டில் போராட்­டங்­கள் வெடித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!