பிரசல்ஸ்: ஐரோப்பிய நாடுகளில் பெருகிவரும் கிருமிப் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல நாடுகள், நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில நகரங்களில் அவை வன்முறையாகவும் வெடித்தன.
பெல்ஜியத் தலைநகரான பிரசல்சில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35,000 பேர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் போலிசார் மீது பொருட்களை வீசினர். சிலர் போலிஸ் வாகனங்
களுக்குத் தீ வைத்தனர். எனவே அவர்களைக் கலைக்க போலிசார், தண்ணீர் பீயிச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்
படுத்தினர்.
நெதர்லாந்தின் பெரும்பாலா நகரங்களில் 3வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டத்தால் அங்கு கலகத் தடுப்பு போலிசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஜெர்மனியில் இதுவரை 68 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்குவது பற்றி அங்கு பரிசீலிக்கப்படுகிறது.