கலிஃபோர்னியா: அமெரிக்காவில் 25 கார்களில் சென்ற முகமூடி அணிந்த 80 பேர் பேரங்காடி ஒன்றினுள் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலிசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில், நார்ட்ஸ்ட்ரோம் என்ற பேரங்காடி உள்ளது. வால்நட் கிரீக் பகுதியில் உள்ள அந்த கடையின் முன்பு கடந்த சனிக்கிழமையன்று முகமூடி அணிந்த 80 பேர் திடீரென சென்று நின்றுள்ளனர்.
ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்த அவர்கள், கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தனர்.
இதனைத் தடுக்க முயன்ற இரண்டு பேரைச் சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள், இன்னொருவர் முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்து நிலைகுலையச் செய்தனர்.
காயமடைந்த மூவருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் அனைவரும் காரில் தப்பிச் சென்றனர். அப்போது 3 பேரை போலிசார் கைது செய்தனர். ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்துக் கடைக்காரர்கள், உடனடியாக தங்கள் கடைகளைப் பூட்டிவிட்டு தப்பியோடினர்.
வெள்ளிக்கிழமையன்று சான்பிரான்சிஸ்கோவின் யூனியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்குள் இதேபோல் கும்பல் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்
கது.