செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a14f5169-d438-4580-9024-1d652e32e4dd
-

வியட்னாம்: இவ்வாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி

ஹனோய்: வியட்னாமில் இவ்வாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் அதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு அந்நாட்டு பிரதமர் பாம் மின் சின் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு தேவையான தடுப்பூசி தங்களிடம் கையிருப்பு உள்ளதாகவும் அவர் சொன்னார். முன்பு இவ்வாண்டு இறுதிக்குள் பாதி பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை நிலவரப்படி, வியட்னாமில் 53.4 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்கானில் பட்டினிச் சாவு அச்சம்

காபூல்: ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் சாவின் விளிம்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் டோலோ சேனலுக்கு யுனிசெஃப்பின் மக்கள் நலக்குழுவின் தலைவர் சாம் மோர்ட் அளித்த பேட்டியில், "உலக குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆப்கானில் கொண்டாட முடியாது, அங்கு குழந்தைகள் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. 14 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மில்லியன் குழந்தைகளுக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்

1 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாவின் பிடியில் இருக்கிறார்கள்," எனத் தெரிவித்தார்.

சீன, இந்திய தடுப்பூசிகளுக்கு பிரிட்டன் அங்கீகாரம்

லண்­டன்: சீனா, இந்­தி­யா­வின் மேலும் சில தடுப்­பூ­சி­களுக்கு பிரிட்­டன் அங்­கீ­கா­ரம் அளித்­துள்­ளது. இதன்­படி சீனா­வின் சினோ­வேக் பையோ­டெக், சினோ­பார்ம், இந்­தி­யா­வின் பாரத் பையோ­டெக் ஆகிய தடுப்­பூ­சி­கள் போட்­டுக்­கொண்­டோ­ரும் இனி பிரிட்­ட­னுக்­குச் செல்­ல­லாம்.

இதை­ய­டுத்து, உலகச் சுகா­தார நிறு­வ­னம் அண்­மை­யில் அனு­மதி அளித்த கோவேக்­சின் உட்­பட அவ­ச­ர­கால பயன்­பாட்­டிற்கு அனு­மதி அளிக்­கப்­பட்ட அனைத்து ஏழு கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளை­யும் பிரிட்­டன் அங்­கீ­க­ரித்­து

உள்­ளது. உள்ளூர் தயா­ரிப்பு தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சீன மாண­வர்­கள் பிரிட்­ட­ன் செல்ல இந்த முடிவு வழி வகுக்­கிறது.

பிரிட்­ட­னில் உள்ள கல்­லூ­ரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இளங்­கலை பயில இந்த ஆண்டு கிட்­டத்­தட்ட 4,500 சீன மாண­வர்­கள் விண்­ணப்­பித்­துள்­ள­னர். கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து இது மூன்­றில் ஒரு பங்கு

அதி­க­ரித்­து உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.