தீப்பற்றி எரிந்த பேருந்து; பல்கேரியாவில் 45 பேர் பலி

தீப்பற்றி எரிந்த பேருந்து; பல்கேரியாவில் 45 பேர் பலி

1 mins read
30070c3c-2d8c-44d3-a7b7-545dab639512
தீ விபத்தில் இருந்து காயங்களுடன் தப்பிய ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -

சோஃபியா: பல்­கே­ரி­யா­வில் பய­ணி­கள் பேருந்து தீப்­பற்றி எரிந்­த­தில் 12 பிள்­ளை­கள் உட்­பட சுற்­று­லாப் பய­ணி­கள் 45 பேர் உடல் கருகிப் பலி­யா­கி­னர். தீக்­கா­யங்­க­ளு­டன் தப்­பிய 7 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

துருக்­கி­யில் இருந்து வடக்கு மேச­டோ­னியா நோக்கி பல்­கே­ரியா வழி­யாக சென்ற பேருந்து உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் அதி­காலை 2 மணி­ய­ள­வில் தீப்­பற்றி எரிந்­தது. பேருந்தில் இருந்தவர்கள் துருக்கிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்களாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மனிதத் தவறு கார­ண­மா­கவோ, பேருந்­தில் ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறு கார­ண­மா­கவோ விபத்து ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று பல்­கே­ரிய அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.