செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9e254780-ac3d-4a84-b3e9-b6dadbe56cf7
-

ராணுவ ஆட்சியைக் கவிழ்க்க

8.6 மில்லியன் வெள்ளி நிதி திரட்டு

யங்­கூன்: மியன்­மா­ரில் ராணுவ ஆட்­சி­யைக் கவிழ்க்­கும் நோக்­கில் தேசிய ஒற்­றுமை அர­சாங்­கம் எனும் போட்டி அர­சாங்­கம் ஒரே­நா­ளில் 6.3 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்

(8.6 மில்­லி­யன் வெள்ளி) நிதி திரட்­டி­யுள்­ளது.

இதற்­காக அவர்­கள் தொடங்­கிய பத்­திர விற்­ப­னை­யின் முதல் மூன்று மணி நேரத்­தில் 3 மில்­லி­யன் டால­ருக்­குப்

பத்­தி­ரங்­கள் விற்­ற­தாக போட்டி அர­சாங்­கத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

தங்­க­ளுக்கு இதற்கு வட்டி எது­வும் கிடைக்­காது என்றாலும் ராணுவ ஆட்­சி­யைக் கவிழ்ப்­ப­தற்கு உத­வும் நோக்­கில், வெளி­நாட்­டில் வசிக்­கும் மியன்­மார் குடி­மக்­கள் பெரும்­பா­லோர் இப்­பத்­தி­ரங்­களை வாங்­கி­யுள்­ள­னர்.

1 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் நிதி திரட்­டு­வது போட்டி அர­சாங்­கத்­தின் இலக்­கா­கும்.

'சீனாவுக்கு எதிரானவர்கள் பிரச்சினை ஏற்படுத்த முயல்கிறார்கள்'

பெய்ஜிங்: சீனாவுக்கு எதிரானவர்கள், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரச்சினையை ஏற்படுத்த முயல்வதாக சீனாவின் குளோபர் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசதந்திர ரீதியில் பெய்ஜிங் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க திட்டமிட்டு வரும் அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து தற்போது மனித உரிமைகள் குழுவும் புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து அந்நாளிதழ் இவ்வாறு கூறியுள்ளது.

இதனிடையே, சீன டென்னிஸ் வீராங்கனை சில நாட்கள் காணாமற்போயிருந்த விவகாரமும் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம்சாட்டும் சீனா

வா‌ஷிங்டன்: அமெரிக்கப் போர்க் கப்பல் மீண்டும் தைவான் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதைச் சாடிய சீனா, வட்டாரத்தில் அமெரிக்கா பதற்றத்தைத் தூண்ட முற்படுவதாகக் குற்றம்சாட்டியது.

அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்டுத்தான், தனது போர்க்கப்பல் தைவான் நீரிணை வழியாகச் சென்றதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் இது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் அது கூறியது.

தடையற்ற, வெளிப்படையான இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்குத் தான் கொண்டுள்ள கடப்பாட்டுக்குச் சான்றுதான் அந்த நடவடிக்கை என்று வாஷிங்டன் தெரிவித்தது.