அமெரிக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 1,000 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 1,000 பேர் உயிரிழப்பு

1 mins read
f424e090-a645-4ac6-8166-0f10651c8a7e
-

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் சில பகு­தி­களில் கிரு­மிப் பர­வல் முன்­னெப்­பொ­தும் இல்­லாத அள­வுக்கு மோச­மாக உள்­ளது.

15 மாநி­லங்­களில் தீவிர சிகிச்சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளோர் எண்­ணிக்கை சென்ற ஆண்­டை­விட மிக­வும் அதி­க­மாக உள்­ள­தாக சுகா­தார மற்­றும் மனித சேவை­கள் துறை­யின் புள்­ளி­ விவரங்­கள் கூறு­கின்­றன.

மூன்று மாதங்­க­ளுக்­கும் மேலாக ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக 1,000 உயி­ர­ழப்­பு­கள் பதி­வா­ன­தாக அந்­நாட்­டின் அறிக்கை ஒன்று கூறு­கிறது.

‌ஏழுநாள் சராசரியின்படி, மருத்து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­

ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் 6% அதிகரித்துள்ளது.

இதற்­கி­டையே, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடக்க நிலையை கொண்டு வர­வேண்­டிய தேவை­யில்லை என்­றும் அமெ­ரிக்கா வேறு வழி­களில் அதைச் சமா­ளிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரி­வித்­துள்­ளது.

அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடு­வது, கூடு­தல் தடுப்­பூசி, சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி இயக்கம் போன்­ற­வற்­றின் மூலம் கிரு­மிப் பர­வலை எதிர்­கொள்­வோம் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்­கி­டையே, விடு­முறைக் காலம் தொடங்­கி­யுள்­ள­தால் கிருமிப் பர­வல் மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­கிறது.

இந்தக் காலகட்டத்தில் உறவினர்களைக் காண பய­ணம் செய்­வோர் எண்­ணிக்கை கிரு­மிப் பர­வ­லுக்கு முந்­தைய நிலைக்­குச் செல்­லக்கூடும் என்றும் எச்­ச­ரிக்­கப்­பட்டுள்­ளது.