இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், அங்கு குழந்தைத் திருமணம் அதிகரித்து வருகிறது.
பசி, பட்டினியால் வாடும் அந்நாட்டு மக்களில் பலர் பணத்திற்காக சிறு வயது பெண் குழந்தை
களைத் திருமணம் செய்து கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் தனது 13 மற்றும் 15 வயது மகள்களை, அவர்களைவிட இரண்டு மடங்கு அதிக வயதுடையவர்களுக்குத் திருமணம் செய்துகொடுத்ததற்கு 3,000 அமெரிக்க டாலர் வரதட்சணை கிடைத்தது.
"எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. இந்த பணமும் தீர்ந்துவிட்டால் என்னுடைய ஏழு வயது மகளையும் திருமணம் செய்து
கொடுக்க வேண்டியிருக்கலாம்," என்றார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்அமைப்பு, ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து நிலவும் வறுமையின் காரணமாக அங்கு குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக பெண் உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வரும் மாதங்களில் இவை இரட்டிப்பாகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொடுப்பதற்காக 20 நாட்களே ஆன பெண் குழந்தைகளையும் பணம் பெற்றுக்கொண்டு கொடுப்பதாக ஐநா குழந்தைகள் அமைப்பு கூறுகிறது.
அடுத்த ஆண்டு மத்தியில் ஆப்கானில் 97 விழுக்காட்டு குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்படும் என்றும் ஐநா கூறியது.
உடனடியாக நிதி ஆதரவு வழங்கப்படவில்லை என்றால், மில்லியன் கணக்கானோர் இறந்துபோகக்
கூடும் என்று ஐநா எச்சரித்து
உள்ளது.

