மிகச்சிறிய மனித இயந்திரங்களைக் கொண்டு பாலர் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் சோதனை முயற்சியை
300 பாலர் பள்ளிகளில் மேற்கொண்டுள்ளது தென்கொரியா. பிள்ளைகளின் விளையாட்டுப் பொம்மை போல் உள்ள இந்த 'அல்ஃபா மினி' மனித இயந்திரத்தின் உயரம் 24.5 சென்டி மீட்டரே. குங்-ஃபூ தற்காப்பு கலையைக் கற்றுக்கொடுக்கும் இந்த மனித இயந்திரம் உடற்பயிற்சி செய்யவும் கற்றுக்கொடுக்கிறது. இது பிள்ளைகளுக்கு நடனமாடவும் சேர்ந்து பாடவும் கற்றுக்கொடுப்பதோடு கதையும் சொல்கிறது. 'அல்ஃபா மினி'யுடன் சேர்ந்து
புஷ்-அப் எனும் உடற்பயிற்சி செய்யும் மாணவர்கள்.
படம்: ஏஎஃப்பி