பதவியேற்ற சில நிமிடங்களில் விலகிய சுவீடன் பிரதமர்

பதவியேற்ற சில நிமிடங்களில் விலகிய சுவீடன் பிரதமர்

1 mins read
8021060b-3577-4f87-991a-c1ea938d7367
-

ஸ்டாக்ஹோம்: சுவீ­ட­னின் முதல் பெண் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற 54 வயது மெக்­ட­லினா ஆண்­டர்­சன், அடுத்த சில மணி­நே­ரத்­தி­லேயே அப்­பொ­றுப்­பில் இருந்து வில­கி­னார்.

அவர் சமர்­ப்பித்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை ஆளும் கூட்­ட­ணி­யின் பசு­மைக் கட்சி நிரா­க­ரித்­த­தை­ய­டுத்து, அவர் பதவி விலக முடி­வெ­டுத்­தார்.

பொரு­ளி­யல் நிபு­ண­ரான அவர் முன்பு நிதி­ய­மைச்­ச­ரா­கப் பொறுப்பு வகித்­த­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சட்­ட­பூர்வ நடை­மு­றை­யைக் கேள்­விக்­குள்­ளாக்­கும் அர­சாங்­கத்தை வழி­ந­டத்த விரும்­ப­வில்லை என்ற அவர், சமூக ஜன­நா­ய­கக் கட்­சியை வழி­ந­டத்த ஆர்­வ­மாய் இருப்­ப­தா­கச் சொன்­னார்.