பெர்லின்: கொரோனா கிருமித்தொற்று மறுபடியும் ஐரோப்பாவில் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. குளிர் காலம் கிருமிப் பரவலை அதிகமாக்கியுள்ளதால், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் கொவிட்-19 கட்டுப்பாட்டுகளை மீண்டும் விதித்து வருவதுடன் தடுப்பூசியையும் வலியுறுத்துகின்றன.
மேற்கு ஐரோப்பாவில் ஏறக்குறைய 60% மக்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் பாதிப் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். பூஸ்டர் ஊசி போடுவது, மின்னிலக்க தடுப்பூசி அட்டையின் தாக்கம் போன்றவை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் கூடிப் பேசியுள்ளனர்.
ஜெர்மனியில் கொவிட்-19 மர ணங்கள் 100,000ஐ தாண்டிவிட்டன. பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ் முதலிய நாடுகளை அடுத்து 100,000க்கும் அதிகமானோரைக் கிருமிக்குப் பலிகொடுத்திருக்கும் ஐந்தாவது நாடு இது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்குக் கட்டுப்பாடுகள் கடுமை யாகும் என்று அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.
பிரான்சில் அன்றாடம் 30,000க்கும் அதிகமான புதிய சம்பவங்கள் பதிவாகின்றன. பள்ளிகள் மூடப்படலாம் என ஏற்கெனவே கோடிகாட்டப்பட்டுள்ளது.
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, பிரான்சின் 67.4 மில்லியன் மக்களில் 76.8% பேர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
"கடுமையான நோய்ப் பாதிப்பும் உயிரிழப்பும் தடுப்பூசி போட்டவர்களைவிட, போடாதவர்களிடையே ஒன்பது மடங்கு அதிகம்," என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறினார்.
வரும் மார்ச் 1ஆம் தேதிக்குள் ஐரோப்பா, மத்திய ஆசியா பகுதிகளில் மேலும் 700,000 கொவிட்-19 மரணங்கள் ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் கொவிட்-19 மரணங்கள் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4,200 ஆக உயர்ந்துள்ளது. இது செப்டம்பர் மாத இறுதியில் பதிவு செய்யப்பட்ட மரண எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகமாகும்.
'தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முன்னெச்சரிக்கை வேண்டும்'
இதற்கிடையே, கொவிட்-19 கிருமித்தொற்று தடுப்பூசிகள் டெல்டா வகை தொற்று பரவுவதைக் கிட்டத்தட்ட 40 விழுக்காடு தடுக்கும் என்ற உலகச் சுகாதார நிறுவனம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
"தடுப்பூசி போட்டுக்கொண்ட
வராக இருந்தால், கடுமையாகப் நோய்வாய்படுவதற்கும் உயிரிழப் பதற்குமான அபாயம் குறைவாக இருக்கும். இருப்பினும் கிருமித்தொற்றுக்கு ஆளாவதற்கும் அதை மற்றவர்களுக்குப் பரப்புவதற்குமான அபாயம் உள்ளது," என்றார் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம்.
எனவே தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கூட்டமான இடங்
களைத் தவிர்ப்பது போன்றவற்றைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.