பனிச் சறுக்கில் அசத்தும் 11 மாதக் குழந்தை

இன்னும் நடக்கத் தொடங்காத 11 மாத வாங் யூஜி பனிச்சறுக்கில் சக்கைபோடு போடுகிறாள்.

சீனாவின் பெய்ஜிங் அருகே உள்ள உல்லாசத் தளமொன்றில், சின்ன சப்பாத்தையும், பனிக்கால உடைகளையும் பெற்றோர் போட்டுவிட்டதும் சின்னஞ்சிறிய சறுக்குப் பலகையில் வாங் யூஜி சறுக்கிச் செல்லும் காணொளி காண்போர் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொள்கிறது. பீபீ என்று செல்லமாக அழைக்கப்படும் யூஜியின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. சீன சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கானோர் யூஜியின் ரசிகர்களாகி உள்ளனர்.

முதன்முதலில் பனிச்சறுக்கில் ஈடுபடுவர்கள் உடலை சமநிலைப்படுத்த தடுமாறுவார்கள். வாங் யூஜி எந்தச் சிக்கலும் இல்லை. பல காலம் பயிற்சி பெற்றவளைப் போல் சள்ளென்று சறுக்குகிறாள்.

“சப்பாத்துகளை அணிந்ததும், தன்னாலேயே நேராக நிற்கிறாள்,” என்றார் குழந்தையின் தாயார் ஃபான் ஸூயின். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் முதன் முதலா யூஜி பனியில் சறுக்கிப் பார்த்தாள். அதிலிருந்து அவளது ஆர்வம் வளரத்தொடங்கிவிட்டது.

மகளின் ஆர்வத்தையும் திறனையும் பார்த்த தந்தை, வாங் ஷூ பனிச்சறுக்குப் பயிற்றுவிப்பாளராக முடிவுசெய்துள்ளார்.
இந்த விளையாட்டுக்கு அண்மைக்காலத்தில்தான் இவர்  அறிமுகமானார். தான் கற்றுக்கொண்டால், மகளுக்கு முறையாகச் சொல்லிக்கொடுக்கலாம் என்பது இவரின் எண்ணம்.  வரும் 2022 பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் இந்த உல்லாசத் தளத்தில்தான் நடைபெற உள்ளன என்பது கூடுதல் செய்தி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!