அமேசானுக்கு எதிராக சுற்றுப்புற ஆர்வலர்களும் தொழிற்சங்கங்களும் போராட்டம்

இன்றைய கருப்பு வெள்ளி விற்பனையை எதிர்த்து, சுற்றுப்புற ஆர்வலர்கள் ஐரோப்பா முழுவதும் 15 அமேசான் சரக்குக் கிடங்குகளை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.  ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசானின் ஊழியர்களும் விநியோக ஓட்டுனர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

சியாட்டிலை தளமாகக் கொண்ட அமேசான், பருவநிலையைப் பேணலுக்காப் போராடும் சுற்றுப்புற ஆர்வலர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது. அதிகப்படியான நுகர்வு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறும் அவர்கள் அமேசானின் நடவடிக்கைகளை எதிர்க்கிறார்கள். அதேநேரத்தில், அமேசான் ஊழியர்களுக்குப் போதிய சம்பளம் வழங்குவதில்லை என்றும் அரசாங்கங்களுக்கு உரிய வரியைச் செலுத்துவதில்லை என்றும் தொழிற்சங்கங்க கூட்டணிகள் குறைகூறுகின்றனர்.

வர்த்தக உத்திகளில் ஒன்றான, ‘கருப்பு வெள்ளி’ எனும் மாபெரும் கழிவு விற்பனை அதிகப்படியான நுகர்வு கலாசாரத்தை வளர்க்கிறது. இது மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற பூமிக்குப் பாதமான போக்கு என்று அமேசான் சரக்குக் கிடங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!