மாணவர் பலி; ஆர்ப்பாட்டத்தால் நிலைகுத்திய போக்குவரத்து

மாணவர் பலி; ஆர்ப்பாட்டத்தால் நிலைகுத்திய போக்குவரத்து

1 mins read
8362de77-e8fe-440f-af39-3685d345d078
மாணவர் உயிரிழப்புக்குக் காரணமான ஓட்டுநர் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி சக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி -

டாக்கா: பங்­ளா­தே­‌ஷில் உயர்

நிலைப் பள்ளி மாண­வர் ஒரு­வர் சாலை விபத்­தில் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து மாண­வர்­கள் உட்­பட பலர் வீதி­யில் இறங்கி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தில் டாக்­கா­வின் முக்­கிய பகு­தி­யில் போக்­கு­வ­ரத்து நிலை­குத்­தி­யது.

அப்­போது மாண­வ­ரின் உயி­ரி­ழப்­புக்­குக் கார­ண­மான குப்பை லாரி ஓட்­டு­நர் மீதான வழக்கு விசா­ர­ணை­யைத் துரி­தப்­ப­டுத்­து­மா­றும் சாலை பாது­காப்பை உறுதி செய்­யு­மா­றும் அவர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

2018ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்­தில் இரண்டு மாண­வர்­கள் உயி­ரி­ழந்­த­போ­தும் மக்­கள் நாடு தழு­விய ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அதைத் தொடர்ந்து கவ­னக்­கு­றை­வாக வாக­னம் ஓட்­டு­ப­வர்­க­ளுக்­கான தண்­டனை கடு­மை­யாக்­கப்­பட்­டது.

ஆனால் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட மாண­வர்­கள் அது போது­மா­ன­தாக இல்லை என்று கூறி­னர்.