‘பிரிட்டன் அவசரப்பட்டுவிட்டது’

தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானங்களுக்குத் தடை

ஜோக­னஸ்­பர்க்: தெற்கு ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து செல்­லும் விமா­னங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்ட விவகாரத்தில் பிரிட்டன் அவ­ச­ரப்­பட்டு­விட்­ட­தாக எண்ணுவதாக தென்­னாப்­பி­ரிக்கா நேற்று கூறி­யது.

இது­வரை கண்­ட­றி­யப்­பட்ட கொவிட்-19 மாறு­பாட்டு வகை­க­ளி­லேயே மிக­வும் வேக­மாக பர­வக்­கூ­டிய பி.1.1.529 எனும் புதிய வகை உரு­மா­றிய கிரு­மித்­தொற்று ஆப்­பி­ரிக்­கா­வில் கண்­ட­றி­யப்­பட்­டது.

இ­தைத் தொடர்ந்து தென்­னாப்­பி­ரிக்கா உள்­ளிட்ட ஆறு ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து செல்­லும் விமா­னங்­க­ளுக்கு பிரிட்டன் உட­ன­டி­யாக தடை விதித்­தது.

ஜோக­னஸ்­பர்க்­கில் நடை­பெ­ற­வுள்ள கோஃல்ப் பொது விரு­துப் போட்­டி­யில் பங்கு பெற­வி­ருந்த பிரிட்­டி‌ஷ் விளை­யாட்­டா­ளர்­களும் அதி­லி­ருந்து வில­கி­யுள்­ள­னர்.

மிக­வும் குறை­வா­ன­வர்­களே இந்த வகை கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருந்­தா­லும் மற்ற உருமாறிய கிருமி வகை­க­ளைக் காட்­டி­லும் வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது என்­ப­தோடு தடுப்­பூ­சியை எதிர்க்­கக்­கூ­டிய ஆற்­றல் மிக்­கது என்­ப­தும் கவ­லை­ய­ளிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது என்­கின்­ற­னர் விஞ்­ஞா­னி­ கள்.

தங்­கள் விமா­னங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை குறித்து மறு­ப­ரி­சீ­லனை செய்­வது பற்றி பிரிட்­டிஷ் அதி­கா­ரி­க­ளு­டன் பேச­வுள்­ளது, இவ்வாறு பிரிட்­டோ­ரி­யா­வில் உள்ள வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்தது.

"பிரிட்­ட­னின் இந்த முடி­வால் இரு நாடு­க­ளின் வர்த்­த­கம், சுற்­று­லாத் துறை ஆகி­ய­வற்­றில் ஏற்­ப­டக்­கூ­டிய இழப்பு குறித்து நாங்­கள் அதிக கவலை கொண்­டுள்­ளோம்," என்­றார் தென்­னாப்­பி­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் நலேடி பண்­டோர்.

ஆனால் தொற்­று­நோய் கட்­டுப்­பாடு, தடுப்­புக்­கான ஆப்­பி­ரிக்க மையமோ இத்­தொற்று கண்­ட­றி­யப்­பட்ட நாடு­கள் மீது பய­ணத் தடை விதிக்­க­வில்லை. அவ்­வாறு செய்­வது அர்த்­த­முள்­ள­தாக இருக்­காது என்று அது கூறி­யது.

உல­கக் சுகா­தார நிறு­வ­னத்­தின் தொற்­று­நோ­யி­யல் நிபு­ண­ரான மரியா வான் கெர்­கோவ், இந்த உரு­மா­றிய கிரு­மி­யின் தாக்­கத்­தைப் புரிந்து கொள்ள சில வாரங்­கள் ஆக­லாம் என்று கூறி­னார்.

இது­கு­றித்து விரி­வாக ஆலோ­சனை நடத்த உல­கச் சுகா­தார நிறு­வ­னம் நேற்று அவ­ச­ர­மா­கக் கூடி­யது.

கிரு­மிப் பர­வ­லால் ஆக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள ஆப்­பி­ரிக்க நாடான தென்­னாப்­பி­ரிக்­கா­வில் நேற்று 2,465 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர். நேற்று முன்­தி­னம் பதி­வா­ன­தை­விட இது இரண்டு மடங்­கா­கும்.

இதனை புதிய உரு­மா­றிய கிரு­மிப் பர­வ­லோடு அந்­நாட்­டின் தேசிய தொற்­று­நோய் மையம் தொடர்­பு­ படுத்­த­வில்லை என்­றா­லும் உள்­ளூர் விஞ்­ஞா­னி­கள் அது­தான் கார­ண­மாக இருக்­கும் என்று சந்­தே­­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!