ஜான்சன்: அகதிகளை பிரான்ஸ் திரும்பப் பெற வேண்டும்

லண்­டன்: இங்­கி­லி‌ஷ் கால்­வாய் வழி­யாக பிரிட்­ட­னுக்­குள் நுழை­யும் அக­தி­களை பிரான்ஸ் திரும்­பப் பெற வேண்­டும் என்று பிரிட்டி‌ஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் அழைப்பு விடுத்­துள்­ளார்.

பிரான்­சில் இருந்து இங்­கி­லி‌ஷ் கால்­வா­யைக் கடந்து பிரிட்­ட­னுக்­குச் செல்ல முயன்­ற­போது படகு கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் 27 அக­தி­கள் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து ஜான்­சன் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

பிரான்ஸ் அக­தி­க­ளைத் திரும்ப அழைத்­துக்­கொள்­வ­தன் மூலம் உயி­ரைப் பண­யம் வைத்து கால்­வா­யைக் கடந்து பிரிட்­ட­னுக்­குள் நுழைய முயல்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறிப்­பி­டத்­தக்க அளவு குறை­யும் என குறிப்­பிட்டு பிரான்ஸ் அதி­பர் இமா­னு­வல் மேக்­ரோ­னுக்கு அவர் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

இதன்­மூ­லம் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளின் உயி­ரை­க் காப்­பாற்றவும் முடி­யும் என்­றார் அவர்.

அத்­து­டன் பிரான்­சி­லி­ருந்து அதி­க­மான பட­கு­கள் வெளி­யேறு வதைத் தடுக்க கடல் ரோந்து பணியில் ரேடார் போன்ற மேம்­பட்ட தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து வது, வான்­வழி கண்­கா­ணிப்பு ஆகி­ய­வற்­றி­லும் பிரான்­சு­டன் ஒத்­து­ழைக்கத் தயா­ராக உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, அக­தி­கள் விவ­கா­ரம் குறித்த பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்க பிரிட்­டன் உள்­துறை அமைச்­சர் பிரித்தி பட்­டே­லுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுக்கவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!