நடைபழகும் வயதில் பனிச்சறுக்கில் அசத்தும் குழந்தை

நடைபழகும் வயதில் பனிச்சறுக்கில் அசத்தும் குழந்தை

1 mins read
ba5f05cd-f65b-401f-ba9d-96edc77458a6
-
multi-img1 of 2

தத்தித்தத்தி நடந்து நடைபழகும் வயதில் பனிச்சறுக்குச் செல்லும் இந்த 11 மாத குழந்தை அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ‌‌சோங்கிலி எனும் பகுதியில் உள்ள 'ரிசார்ட்டில்' யூஜி எனும் பெயர் கொண்ட இந்த பெண் குழந்தை பாதுகாப்பு உடைகள் அணிந்துகொண்டு பனிச்சறுக்கில் ஈடுபடும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் யூஜி பனிச்சறுக்கு விளையாடத் தொடங்கியதாக அவளது பெற்றோர் கூறினர். அப்போது முதல் சிறிதும் பயமில்லாமல் தினமும் காலை பனிச்சறுக்குக்குத் தயாராகி விடுவதாகவும் அவர்கள் கூறினர்.

படம்: ஏஎஃப்பி