மலேசிய அமைச்சர்: பொதுத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவது நல்லதல்ல

புத்­ர­ஜெயா: மலே­சி­யா­வில் இப்­போ­தைக்­குப் பொதுத் தேர்­தலை நடத்­து­வது பொறுப்­பற்ற செய­லாக அமைந்­து­வி­டும் என்று கூறி­யுள்­ளார் மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன்.

மலே­சி­யா­வின் தற்­போ­தைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பத­விக்­கா­லம் வரும் 2023ஆம் ஆண்டு வரை உள்­ளது என்­றா­லும் திடீர் தேர்­தல் வரக்­கூ­டும் என்று பல­ரும் ஊகிக்­கின்­ற­

னர்.

இந்­நி­லை­யில் பேசிய கைரி, "கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது, புதிய உரு­மா­றிய கிருமி ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு பார்த்­தால் தற்போது பொதுத் தேர்­தலை நடத்­து­வது சரி­யாக இருக்­காது.

"பொதுத் தேர்­தல் தவிர்க்­கப் படக்­கூ­டிய ஒன்று. இது சர­வாக், மலாக்கா சட்­ட­மன்­றத் தேர்­த­லைப் போன்­றது அல்ல.

"இப்­போ­தைக்கு பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கு சுகா­தார அமைச்சு கண்­டிப்­பாக அறி­வு­றுத்­தாது," என்­றார் அவர்.

மலாக்­கா­வைத் தொடர்ந்து சர­வாக்­கில் வரும் 18ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள சட்­ட­மன்­றத் தேர்­

த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்­கல் 6ஆம் தேதி நடை­பெ­றும்.

தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் அடுத்த வாரம் முதல் வாராந்­திர கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் அவர் சொன்­னார்.

ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் 10 விழுக்­காட்டு மாண­வர்­க­ளி­டம் சுழற்சி அடிப்­ப­டை­யில் வாரா­வா­ரம் கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மலே­சியா-சிங்­கப்­பூ­ருக்கு இடை­யி­லான சரக்கு போக்­கு­வ­ரத்­துக்­காக வரும் 29ஆம் தேதி முதல் ஜோகூர் கடற்­பா­லம் 18 மணி நேரம் செயல்­படும் என்று மலே­சிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ க சியோங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்­குப் பிறகு பேசிய அவர் இனி காலை ‌7 மணி முதல் பின்னிரவு 1 மணி வரை ‌ஜோகூர் கடற்பாலம் செயல்­படும் என்று சொன்­னார்.

இது நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை மீட்­பதுடன் வர்த்­த­கர்­க­ளின் சிர­மங்­க­ளை­யும் குறைக்­கும் என்று அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!