புதிய இரையைத் தேடும் பனிக்கரடி

புதிய இரையைத் தேடும் பனிக்கரடி

1 mins read
0c9d535c-17ba-4cbc-9df3-b1f26aa0360b
-

மனிதர்கள் நினைத்த மாமிசங்களை உண்பர். விலங்குகளோ, அவற்றுக்குத் தோதாகக்கூடிய சில வகை இறைச்சிகளைத் திண்பதே வழக்கமாகக் கொள்ளும்.

ஆயினும், பருவநிலை மாற்றத்தால் உண்ணும் உணவு வகைகளை மாற்றும் நிலைமைக்கு சில விலங்குகள் ஆளாகின்றன. நார்வேயிலுள்ள ஒரு பனிக்கரடி மான் ஒன்றை வேட்டையாடி அதனைத் திண்பதைக் காட்டும் படம் ஊடகங்களில் பரவி வருகின்றது. பனியின் உருக்கத்தால் கடல் மட்டம் அதிகரித்து வருவதால் இப்போது பனிக்கரடிகள் சில காட்டுப்பகுதிகளுக்கருகே சென்று இறை தேடத் தொடங்கியுள்ளன. ஆயினும் பனியின் அளவு குறைந்தால் அதிக பனிக்கரடிகள் மடியக் கூடும் என்று சுற்றுப்புற ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.