சரவாக் சாலையில் திடீர் பள்ளம்

சரவாக் சாலையில் திடீர் பள்ளம்

1 mins read
709b2401-e903-4457-9237-7cec754a3332
-

சரவாக் மாநிலத்தின் கோத்தா கினாபாலுவில் மூன்று பள்ளிகளையும் குடியிருப்புப் பகுதிகளையும் இணைக்கும் சாலை ஒன்றில் பள்ளம் ஒன்று திடீரென தோன்றியது. அந்தக் குழிக்குள் எவரும் விழவில்லை.

அக்குழி மூன்று மீட்டர் அகலத்தையும் இரண்டு மீட்டர் ஆழத்தையும் கொண்டது. பாதிக்கப்பட்ட சாலைப் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாக பொதுத்துறை ஊழியப் பிரிவு தெரிவித்தது. இன்று காலை 11 மணிக்குத் தோன்றிய அந்தக் குழியைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

நாளை பள்ளிகள் திறக்கப்போகும் நேரத்தில் வாகன போக்குவரத்தை கவனமாக வழிநடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.