அன்வாரை விலகக் கோரும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள்

அன்வாரை விலகக் கோரும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள்

1 mins read
58d696ca-e519-4a6b-be52-77511922cc24
-

மலேசியாவின் எதிர்தரப்புக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம்மைத் தலைமை பதிவியிலிருந்து விலகக் கோரியுள்ளனர். மலாக்கா மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து திரு அன்வார் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முக்கியமாக ஜனநாயக செயல் கட்சி கோரி வருகிறது.

இருபது ஆண்டுகளாகப் பிரதமர் ஆக தொடர்ந்து முயன்றுவந்த 74 வயது திரு அன்வார், தமது லட்சியத்தில் பிடிவாதம் காட்டாமல் இளம் தலைவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பலர் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கூறி வருகின்றனர். ஆயினும், திரு அன்வார் ஆகப் பிரபல எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாக பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கூறுகின்றனர்.