ஜெருசலம்: ஓமிக்ரான் என்று பெயர் இடப்பட்டுள்ள உருமாறிய கொவிட்-19 கிருமி, உலகம் முழுவதும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் முதல் நாடாக இஸ்ரேல் தனது நாட்டின் எல்லைகளை மூடுகிறது.
அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்தக் கிருமியைக் கட்டுப் படுத்த பயங்கரவாத எதிர்ப்பு கைபேசி தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தவும் இஸ்ரேலிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
"அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு தடை அமலுக்கு வரும், 14 நாட்களுக்கு தடை நீடிக்கும்," என்று பிரதமர் நஃப்டாலி பென்னட்டின் அறிக்கை தெரிவித்தது.
இஸ்ரேலுக்குள் அந்நாட்டின் குடிமக்கள் மட்டும் நுழைய அனு மதியிருக்கும். ஆனால் அவர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் தனிமை உத்தரவை நிைறவேற்ற வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
இதற்கிடையே உருமாறிய கிருமிக்கு எதிராக தடுப்பூசிகளின் ஆற்றல் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டது. அப்போது முதல் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.
இந்தோனீசியாவும் எட்டு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்க விருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பாலித் தீவுக்குள் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமிபியா, ஸிம்பாப்வே, லேசோத்ேதா, மொஸாம்பிக், எஸ்வாட்டினி, நைஜிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரபூர்வ ஆவணம் தெரிவித்தது. இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்தோனீசியா தலைமையில் நடைபெறும் ஜி-20 கூட்டத்துக்கு வரும் பேராளர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

