ராணுவத் தீர்ப்பு; ஆங் சான் சூச்சிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்

நேப்­பி­டாவ்: ஜன­நா­யக அர­சின் முன்­னாள் ஆலோ­ச­க­ரான ஆங் சான் சூச்சி மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­யுள்ள ராணு­வம், நாளை தீர்ப்பு வழங்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தீர்ப்­பில் சூச்­சிக்கு பல ஆண்டு ­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம் எனத் தெரிகிறது.

இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் ராணு­வத் தலை­வ­ரான மின் அங் ஹிலைங், தான் ஓய்வு பெற வேண்­டிய வய­தில் ஜன­நா­யக ஆட்­சி­யைக் கவிழ்த்து ஆட்­சியில் அமர்ந்தார்.

அப்­போது முதல் நோபெல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அடை­யா­ளம் தெரி­யாத இடத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார். 1,200க்கும் மேற்­பட்­டோர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 10,000க்கும் மேற்­பட்­டோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் உள்­ளூர் கண்­கா­ணிப்­புக் குழுக்­கள் தெரி­வித்­துள்­ளன.

ராணு­வத்­துக்கு எதி­ராக தூண்­டிய குற்­றச்­சாட்­டில் சூச்சிக்கு மூன்று ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை விதிக்கப்படலாம். அர­சி­யல் அரங்­கி­லி­ருந்து ஜன­நா­ய­கத்தை அகற்­றும் நோக்­கத்­தோடு இந்­தக் குற்­றச்­சாட்டு கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக அர­சி­யல் வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஆனால் ஆங் சான் சூச்சி மீதான ராணு­வத்­தின் திட்­டம் பற்றி தெளி­வா­கத் தெரி­ய­வில்லை. இந்­நி­லை­யில் தீர்ப்பு இன்­னும் சில நாட்­க­ளுக்கு தாம­தப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்­று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!