மலாக்கா தேர்தல் தோல்வி; அன்வாருக்கு நெருக்கடி

கோலா­லம்­பூர்: கடந்த வாரம் நடை­பெற்ற மலாக்கா சட்­ட­மன்றத் தேர்­த­லில் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி படு­தோல்­வி­யைச் சந்­தித்­தது.

இதை­ய­டுத்து அன்­வார் இப்­ரா­ஹிம் பதவி விலக வேண்­டும் என்று கோரிக்கை எழுந்­துள்­ளது.

ஆனால் அன்­வார்­தான் தற்­போ­தைய சூழ­லில் வலு­வான எதிர்க்­கட்­சித் தலை­வர் என்று கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள பல தலை­வர்­கள் அவ­ருக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­துள்­ள­னர்.

குறிப்­பாக. ஜன­நா­யக செயல் கட்­சி­யின் தேசிய ஏற்­பாட்­டுச் செய­லா­ள­ரான அந்­தோணி லோக், அன்­வார் பதவி விலக வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள இந்­தக் கட்சி நாடா­ளு­மன்­றத்­தில் அதிக இடங்­களை பெற்­றுள்­ளது.

பக்­கத்­தான் ஹரப்­பா­னின் ஒரே பிர­த­மர் வேட்­பா­ளர் அன்­வார் இப்­ரா­ஹிம் என்று குறிப்­பி­டு­வ­தை­யும் நிறுத்த வேண்­டும் என்று அவர் கூறி­யுள்­ளார்.

"2018 மே மாதம் நடை­பெற்ற தேர்­த­லில் மக்­க­ளி­டம் நம்­பிக்ையை ஏற்­ப­டுத்த ஒரே சின்­னம் தேவைப்­பட்­டது. ஒரே பிர­த­மர் வேட்­பா­ளர் தேவைப்­பட்­டார். ஆனால் இப்­போது நிலைமை மாறி­விட்­டது," என்­றார் அவர்.

ஆனால் இதனை மறுத்­துள்ள பக்­கத்­தான் ஹரப்­பா­னின் கூட் டணித் தலை­வர்­கள் பலர், இப்­போ­தும் அன்­வார்­தான் பிர­ப­ல­மான எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்கிறார் என்று தெரி­வித்­த­னர்.

மலாக்கா தேர்­தல் தோல்­விக்­குப் பிறகு அடுத்து என்ன செய்ய வேண்­டும் என்­ப­தையே இனி ஆலோ­சிக்க வேண்­டும் என்று அவர்­கள் கூறி­னர்.

இதற்­கி­டையே அன்­வா­ரின் கெஅ­டி­லான் கட்­சி­யின் தொடர்பு இயக்­கு­ந­ரான ஃபாமி ஃபட்­ஸில், திரு ேலாவின் கருத்து ஒட்டு ெமாத்த கூட்­ட­ணி­யின் எண்­ணத்­தைப் பிர­தி­ப­லிக்­க­வில்லை என்று கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!